தகராறில் ஈடுபட்ட தொழிலாளி கைது


தகராறில் ஈடுபட்ட தொழிலாளி கைது
x
தினத்தந்தி 4 Oct 2021 1:07 AM IST (Updated: 4 Oct 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் தகராறில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை டவுன் சைலப்பர் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருக்கும், டவுன் மாதா சன்னதி தெருவை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பரமசிவன், குமாரிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து பரமசிவனை கைது செய்தனர்.

Next Story