மாவட்ட செய்திகள்

மனைவியை தாக்கியதாக கணவர் கைது + "||" + Husband arrested for assaulting wife

மனைவியை தாக்கியதாக கணவர் கைது

மனைவியை தாக்கியதாக கணவர் கைது
மனைவியை தாக்கியதாக கணவர் கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இளையபெருமாள் நல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் வீராசாமி (வயது 36). இவருடைய மனைவி சரண்யா (வயது 26). சம்பவத்தன்று சரண்யா தனது தங்கைக்கு குழந்தை பிறந்ததால், குழந்தையை பார்க்க சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சரண்யாவிற்கு, வீராச்சாமி போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த சரண்யாவை, நீ யாரிடம் போனில் பேசுகிறாய் என்று வீராசாமி கேட்டு, திட்டி தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சரண்யா ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து, வீராசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்கு
விவசாயியை தாக்கிய மகன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2. காங்கோ நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல்; 8 சீனர்கள் கடத்தல்
காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் சீன தங்க சுரங்கத்தில் தாக்குதல் நடத்தி 8 சீனர்களை மர்ம நபர்கள் கடத்தி சென்றனர்.
3. மாலியில் பயங்கரவாத தாக்குதல்; 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
4. வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது
குளித்தலை அருகே வாலிபரை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
5. ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேருக்கு வலைவீச்சு
தளவாபாளையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.