மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 2 சிறுவர்கள் கைது + "||" + 2 minor boys arrested

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 2 சிறுவர்கள் கைது

வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் உல்லாசமாக இருந்த 2 சிறுவர்கள் கைது
மங்களூரு அருகே மது போதையில் வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் 2 சிறுவர்கள் உல்லாசமாக இருந்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
மங்களூரு: மங்களூரு அருகே மது போதையில் வனப்பகுதியில் மைனர் பெண்களுடன் 2 சிறுவர்கள் உல்லாசமாக இருந்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். 

மைனர் பெண்கள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்கு உட்பட்டது குருபரா சிலிம்பி குட்டே வனப்பகுதி. சம்பவத்தன்று இந்த வனப்பகுதியில் 16 வயது நிரம்பிய 2 மைனர் பெண்கள், 17 வயது நிரம்பிய 2 சிறுவர்களுடன் போதை மயக்கத்தில் ஒன்றாக இருந்துள்ளனர். இதுபற்றி அறிந்த பஜ்ரங்தள அமைப்பினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த 2 மைனர் பெண்கள் மற்றும் அவர்களுடன் இருந்த 2 சிறுவர்களையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த 2 சிறுவர்களும் போதையில் இருந்ததும், அவர்கள் அந்த மைனர் பெண்களின் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் அந்த மைனர் பெண்களை வனப்பகுதிக்கு அழைத்து வந்து மதுகுடித்துவிட்டு உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. 

கைது

இதையடுத்து போலீசார் அந்த மைனர் பெண்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் பஜ்பே போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அதையடுத்து போலீசார் அந்த மைனர் பெண்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அவர்களது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் அந்த மைனர் பெண்களின் காதலர்கள் 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.