ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த சென்னை கல்லூரி மாணவர் கைது


ஆந்திராவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த சென்னை கல்லூரி மாணவர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2021 3:00 PM IST (Updated: 4 Oct 2021 3:00 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் நேற்று கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஆந்திராவில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த தமிழக அரசு பஸ்சில் ஏறி சோதனை செய்தனர். அந்த பஸ்சில் ஆந்திராவில் இருந்து 2 கிலோ எடை கொண்ட கஞ்சாவை கடத்தி வந்த சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரை சேர்ந்த ரேவன்குமார் (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு பிசியோதெரபி படித்து வருவதும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.

Next Story