கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை


கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 4 Oct 2021 12:32 PM GMT (Updated: 4 Oct 2021 12:32 PM GMT)

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி

கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

ஆரணி வி.ஏ.கே.நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 44). கூலித்தொழிலாளியான அவர் பட்டு மளிகையில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலால் 2 ஆண்டாக சரிவர வேலை இல்லாததால் பலரிடம் கடன் வாங்கினார். ஆனால் அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை. 

கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதனால் மனமுடைந்த அவர் இன்று காலை வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story