யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


யூரியா தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2021 5:38 PM GMT (Updated: 4 Oct 2021 5:38 PM GMT)

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வாக்கடை புருசோத்தமன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உர தட்டுபாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கூறுகையில், ஆகஸ்டு மாதம் பெய்த மழையால் நிலத்தடி நீர் உயர்ந்து சுமார் 1 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது 40 நாட்கள் ஆகிறது. தற்போது திட யூரியாவிற்கு மாற்றாக திரவ யூரியா ஏக்கருக்கு ரூ.800 என 3 முறை தெளிப்பதால் கூடுதல் செலவாகிறது. எனவே யூரியா உர தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பின்னர் அவர்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story