ஜவுளி வியாபாரி கொலை வழக்கு:திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்


ஜவுளி வியாபாரி கொலை வழக்கு:திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்
x
தினத்தந்தி 4 Oct 2021 8:44 PM GMT (Updated: 4 Oct 2021 8:44 PM GMT)

திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரணடைந்தார்

திருச்சி
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். ஜவுளி வியாபாரி. இவர் கடந்த மாதம் 22-ந் தேதி இரவு அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பல் ஸ்டீபன்ராஜின் தலையை துண்டித்து எடுத்துச் சென்று, சிறிது தூரத்தில் வீசிவிட்டு சென்றனர். இந்த கொலை வழக்கு குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வந்தனர். இந்தநிலையில் ஸ்டீபன்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த சரவணன் (வயது 35) என்பவர் நேற்று காலை திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 1-ல் சரண் அடைந்தார். அவரை வருகிற 11-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஆசாத் கார்த்தி உத்தரவிட்டார்.
இதேபோல, நாகை மாவட்டம் வடக்கரை அண்ணாநகரை சேர்ந்தவர் முனீஸ்வரன் (40). இவர் மீது நாகூர் போலீஸ் நிலையத்தில் கஞ்சா விற்ற வழக்கு உள்ளது. தலைமறைவான இவரை கடந்த சில நாட்களாக போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை அவர் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 2-ல் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜி்ஸ்திரேட்டு திரிவேணி உத்தரவிட்டார்.


Next Story