முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் திறப்பு


முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் திறப்பு
x
தினத்தந்தி 5 Oct 2021 2:44 AM IST (Updated: 5 Oct 2021 2:44 AM IST)
t-max-icont-min-icon

முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது.

அரியலூர்:

முககவசம் அணிந்து வந்தனர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டு காட்சியளித்தன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1-ந்தேதி முதல் முதலாமாண்டு வகுப்புகளை தவிர, மற்ற வகுப்புகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் அக்டோபர் 4-ந்தேதி முதல் முதலாமாண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று முதல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.
சமூக இடைவெளியை பின்பற்றி...
கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, அவர்கள் கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு முதலில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பேராசியர்கள் பாடங்களை கற்பித்தனர். மேலும் வகுப்பறைகளில் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது.

Next Story