ஓமலூர் அருகே பரபரப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்-சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்

ஓமலூர் அருகே பரபரப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்-சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்
x
தினத்தந்தி 5 Oct 2021 4:58 AM IST (Updated: 5 Oct 2021 4:58 AM IST)
t-max-icont-min-icon

சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறிய கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஓமலூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஓமலூர்:
சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறிய கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் ஓமலூர் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சாலை ஆக்கிரமிப்பு
ஓமலூரை அடுத்த எம்.செட்டிபட்டி ஊராட்சி தெற்கு காட்டுவளவு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் எம்.செட்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி மன்ற அலுவலகம், இறந்தவரை அடக்கம் செய்ய சுடுகாட்டுக்கு செல்ல என எம்.செட்டிப்பட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். இந்தசாலை தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலையில் கற்கள் நடப்பட்டதாக தெரிகிறது. இதனால் தெற்கு காட்டுவளவு பகுதி மக்கள் சாலையை பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாயினர்.
மேலும் பள்ளிக்கூடம் செல்ல ேவண்டுமானாலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல வேண்டுமானாலும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிதான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இடைத்தேர்தல்
இதற்கிடையே 10-வது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க தெற்கு காட்டுவளவு பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் தங்களது வீடுகளில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி இடைத்தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறியதுடன், வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ள சம்பவம் தெற்கு காட்டு வளவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
===

Next Story