பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 Oct 2021 7:23 AM IST (Updated: 5 Oct 2021 7:28 AM IST)
t-max-icont-min-icon

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொம்மிடி,

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூரை சேர்ந்த பொன்முடி. இவருடைய மகள் தாரகை (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவி இரவில் வெகு நேரம் வீட்டில் செல்போன் பேசியதாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story