மாவட்ட செய்திகள்

வள்ளலார் பிறந்த நாள் 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு + "||" + TN CM MK Stalin Announces Vallalar Birth Anniversary as Mercy day

வள்ளலார் பிறந்த நாள் 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வள்ளலார் பிறந்த நாள் 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வள்ளலாரின் பிறந்த நாளான அக்டோபர் 5-ம் தேதி (இன்று) 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் பிறந்தநாள் இன்று (அக்டோபர் 5) கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், வள்ளலாரின் பிறந்த நாள் ‘தனிப்பெங்கருணை’ நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'அருட்பிரகாச வள்ளலார்‌ என்று அழைக்கப்படும்‌ இராமலிங்க அடிகளார்‌ கடலூர்‌ மாவட்டம்‌ சிதம்பரத்திலிருந்து 10 மைல்‌ தொலைவில்‌ உள்ள மருதூரில்‌ 05.10.1823-இல்‌ பிறந்தார்‌. கருணை ஒன்றையே வாழ்க்கைநெறியாகக்‌ கொண்டு வாழ்ந்தார்‌. 

அனைத்து நம்பிக்கைகளிலும்‌ உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும்‌ வண்ணம்‌ இவர்‌ சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார்‌. இவர்‌ வடலூரில்‌ சத்தியஞான சபையை எழுப்பினார்‌. 'வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடினேன்‌’ என்று பாடிய இவர்‌, மக்களின்‌ பசித்துயர்‌ போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார்‌. 

அவர்‌ ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாமல்‌ தொடர்ந்து எரிந்த வண்ணம்‌ பசியோடு இருக்கும்‌ மக்களின்‌ வயிற்றை நிரப்புகிறது. மனுமுறை கண்ட வாசகம்‌, ஜீவகாருண்ய ஒழுக்கம்‌ ஆகிய உரைநடைகளை எழுதினார்‌. இவர்‌ பாடிய பாடல்களின்‌ திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

திருவருட்பா ஆறாம்‌ திருமுறையில்‌, எந்தச்‌ சமயத்தின்‌ நிலைப்பாட்டையும்‌ எல்லா மதநெறிகளையும்‌ சம்மதம்‌ ஆக்கி கொள்கிறேன்‌ என்றார்‌. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்‌ நிறுவிய அவர்‌, சத்திய தருமச்சாலையையும்‌, சித்தி வளாகத்தையும்‌ உருவாக்கினார்‌. 

பசிப்பிணி நீக்கும்‌ மருத்துவராக வாழ்ந்து காட்டினார்‌. அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும்‌ அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது. அவர்‌ பிறந்தநாளான அக்டோபர்‌ ஐந்தாம்‌ நாள்‌ இனி ஆண்டுதோறும்‌ “தனிப்பெருங்கருணை நாள்‌” எனக்‌ கடைப்பிடிக்கப்படும்‌ என்று அறிவிக்கப்படுகிறது’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2. மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கல் மு.க.ஸ்டாலின் அறிக்கை
அணை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. 89-வது பிறந்தநாள்: கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
89-வது பிறந்தநாளையொட்டி கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
4. அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.12.35 கோடி நலத்திட்ட உதவி - மு.க.ஸ்டாலின் வழங்கினார்
அமைப்புசாரா தொழிலாளர்கள் 50 ஆயிரம் பேருக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5. செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு - நிவாரண உதவிகளை வழங்கினார்
கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரியில் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.