ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன-கலெக்டர் உத்தரவு
தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 12 மணி வரை மூட வேண்டும். இதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 12-ந்தேதி அன்றும் மதுபானக்கடைகளை மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story