காங்கேயத்தில் கொரோனா தடுப்பூசிமுகாம் இன்று நடக்கிறது.
kangeyam koranaa uusi
காங்கேயம்.
காங்கேயத்தில் கொரோனா தடுப்பூமி முகாம் இன்று நடக்கிறது.
தடுப்பூசிமுகாம்
தமிழகம் முழுவதும் கொரோனா அலையை கட்டுப்படுத்த பல்வேறு விழிப்புணர்வுகளும், தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கேயம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பாக கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசு பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
காங்கேயம் வட்டாரத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி இன்று (புதன்கிழமை) போடப்படுகிறது.
சாவடிபாளையம்
சாவடிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நத்தக்காடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாப்பினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காங்கேயம் நகரம், பழைய கோட்டை சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. சிவன்மலை, நால்ரோடு, கஸ்பா பழையகோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மினி கிளினிக்கில், காங்கேயம் அரசு மருத்துவமனையிலும் இன்று தடுப்பூசி போடப்படுகிறது.
----
Related Tags :
Next Story