இந்து முன்னணி நிர்வாகியை கத்தியால் குத்திய 2 பேர் கைது
கத்தியால் குத்திய 2 பேர் கைது
பல்லடம்,
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுரு(வயது 35) பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அந்தப் பகுதி இந்துமுன்னணி நிர்வாகியாக உள்ளார். இந்து முன்னணி அமைப்பில் தீவிரமாக செயல்படுவதால் அந்தப் பகுதியில் உள்ள சிலருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிவகுருவிடம், அங்கு வந்த சிலர், தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவகுருவின் வயிறு, இடுப்பு கை ஆகிய பகுதிகளில் குத்தியுள்ளான். இதனால் பலத்த காயமடைந்த சிவகுருவை, அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில், இறங்கிய பல்லடம் போலீசார், தலைமறைவாக இருந்த, லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த விசுவநாதன் மகன் காளிச்சாமி, 30, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் தமிழ்ச்செல்வன், 24, ஆகியோரை நேற்று கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில், ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக தலைமறைவாக உள்ள மேலும் சிலரை, போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story