வாக்காளர்களுக்கு வழங்க இருந்த சேலை, மதுபாட்டில்கள் பறிமுதல்
திண்டிவனம் அருகே வாக்காளர்களுக்கு வழங்க இருந்த சேலை, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டிவனம்,
திண்டிவனம் அருகே ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நெமிலி கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பரிசாக சேலை கொடுக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மர்மநபர்கள் சிலர் சேலை மற்றும் மதுபாட்டில்களை வைத்திருந்தனர். அவர்கள் தேர்தல் பறக்கும் படையினரை பார்த்ததும், சேலை, மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர், மர்மநபர்கள் ேபாட்டுவிட்டு சென்ற 94 சேலைகள், 17 மதுபாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சேலை மற்றும் மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு பரிசாக வழங்கப்பட இருந்தது தெரிந்தது. இதையடுத்து அதனை ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story