வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 2,500 போலீசார்
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கூறினார்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம், காவல் துறையினருடன் இணைந்து செய்து வருகின்றனர்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கே.எம்.ஜி. கல்லூரியில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நேரில் பார்வையிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார் .
தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் என்னுடைய தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 10 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 40 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஊர்க்காவல் படையினர் என 2,500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாதுகாப்பான முறையில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற பொதுமக்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story