அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் மூலம் பயிற்சி பெற்ற ராஜஸ்தான் பெண் பணி நீக்கம்


அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில்  போலி சான்றிதழ் மூலம் பயிற்சி பெற்ற  ராஜஸ்தான் பெண் பணி நீக்கம்
x
தினத்தந்தி 5 Oct 2021 11:36 PM IST (Updated: 5 Oct 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் மூலம் பயிற்சி பெற்ற ராஜஸ்தான் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

அரக்கோணம்

அரக்கோணம் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் போலி சான்றிதழ் மூலம் பயிற்சி பெற்ற ராஜஸ்தான் பெண் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் உள்ளது. இந்த மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) போலீஸ் மற்றும் உதவி சப்- இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.  அதன்படி கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி முதல் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் பணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட காமோஷ் ராவத் (22). என்ற பெண் பயிற்சி பெற்று வந்தார்.

போலி சான்றிதழ்

இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு அனுப்பி வைத்தபோது அவரது இருப்பிட சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து காமோஷ் ராவத்தை அலுவலர்கள் பணியில் இருந்து நீக்கினர். 

இதுகுறித்து தக்கோலம் போலீசில் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் இன்ஸ்பெக்டர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் காமோஷ் ராவத் 12-ம் வகுப்பு வரை ராஜஸ்தான் மாநிலத்தில் படித்ததும் இவரது தந்தை நாகாலாந்து மாநிலத்திற்கு சென்று வியாபாரம் செய்து வந்ததும் அப்போது நாகாலாந்தில் சி.ஐ.எஸ்.எப். போலீஸ் பணிக்கு தேர்வு நடந்ததால் நாகாலாந்தில் வசிப்பதாக இருப்பிட சான்றிதழ் பெற்று சமர்ப்பித்ததாகவும் தெரிய வந்தது. 

மேலும், அலுவலர்கள் சான்றிதழ்களை சரிபார்ப்புக்கு அனுப்பியதில் அலுவலர்கள் தரப்பிலிருந்து தரவில்லை என்பதும் தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story