திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது


திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 5 Oct 2021 11:51 PM IST (Updated: 5 Oct 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) தேர்தல் நடப்பதையொட்டி வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) தேர்தல் நடப்பதையொட்டி வாக்குப்பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில்  இன்று (புதன்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 

தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள், வாக்குப்பெட்டிகள் ஆகியவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குசாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பதற்றமான வாக்குசாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

பணி ஆணை

திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டது. இதனை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தலுக்கு தேவையான உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து நாட்டறம்பள்ளி மற்றும் கந்திலி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்கள் அனுப்பும் பணிகளையும், திருப்பத்தூர் தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கியதையும்  பார்வையிட்டார்.

ஆய்வின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரேம்குமார், மகேஸ்குமார், வினாயகம், வாக்குச்சாவடி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story