கரூரில் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்


கரூரில் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 6 Oct 2021 12:04 AM IST (Updated: 6 Oct 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

விற்பனையாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கரூரில் டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.

கரூர்,
கொலை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் டாஸ்மாக் விற்பனையாளரான துளசிதாசை (வயது 43) மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தி கொலை செய்தனர். 
இதைகண்டித்தும், அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரியும் கரூர் மாவட்ட டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் டாஸ்மாக் கடைகளை நேற்று அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இதையொட்டி கரூரில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து கரூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் டாஸ்மாக் கூட்டுக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட மேலாளர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் கடைகளை திறந்தனர். இதனால் கரூரில் சுமார் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story