அரியலூர் மாவட்டத்தில் மழை


அரியலூர் மாவட்டத்தில் மழை
x
தினத்தந்தி 6 Oct 2021 1:37 AM IST (Updated: 6 Oct 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்தது.

அரியலூர்:

மழை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அரியலூர் பகுதியில் நேற்று காலை லேசான தூறலாக மழை பெய்ய தொடங்கியது. 10 மணிக்கு மேல் தொடர்ந்து மழை பெய்தது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் மழையின் வேகம் அதிகரித்தது.
மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர். சாலையோரம் கடை வைத்திருந்த வியாபாரிகள் மழையில் நனைந்தபடி வியாபாரம் செய்தனர். சாலையில் மழைநீர் தேங்கியது.
ஏரிகள் நிரம்பவில்லை
தற்போது மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு களையெடுக்கும் பருவம் என்பதால் விவசாயிகள் களை எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். அரியலூர் தாலுகா அளவில் தொடர்ந்து லேசான மழை பெய்து வருகிறது. பெரிய ஏரிகள் இன்னும் நிரம்பவில்லை. இருப்பினும் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
விவசாயத்திற்கு இந்த மழை போதுமானது என்று கூறப்படுகிறது. அடுத்த வாரம் வடகிழக்கு பருவமழை பெய்ய உள்ள நிலையில், தூறல் மழையால் பூமி நன்கு நீரை உள்வாங்கி இருப்பதால், வரும் காலத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
Next Story