காரில் கடத்திய 23 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 5 பேர் கைது
காரில் கடத்திய 23 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உள்பட 5 பேர் கைது
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் போலீசார் நடத்திய சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 23 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 கிலோ கஞ்சா
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கேணிக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வல்லபைநகர் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அந்த வழியாக வந்த காரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது காரில் 23 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கஞ்சாவுடன் காரை பறிமுதல் செய்து காரில் இருந்தவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
5 பேர் கைது
விசாரணையில் பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவ தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார்(வயது31), ஹேமலதா(26), ராமநாதபுரம் ஓம்சக்திநகர் 6-வது தெரு அஜய்குமார் (21), காஞ்சிபுரம் கேளம்பாக்கம் வ.உ.சி. தெருவை சேர்ந்த மாதவன் (20), ராமநாதபுரம் ஓம்சக்திநகர் மார்க்ஸ்மைக்கேல் சாம்ராஜ்(22) என்பது தெரிந்தது. இதில் ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதா மீது கஞ்சா உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இந்த கஞ்சாவை சென்னையில் இருந்த வாங்கி வந்து ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகளிடம் கொடுத்து சில்லரையாக விற்பனை செய்ய கொண்டு வந்தது விசாரணையில் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ரஞ்சித்குமார், ேஹமலதா உள்பட 5 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story