நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 9 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் 600-க்கும் அதிகமான விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவ்வாறு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஏராளமான படகுகளில் மீனவர்கள் கடலில் மீன்களுக்காக விரித்திருந்த வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனால் நேற்று காலை மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் மீனவர்கள் கரை திரும்பினார்கள்.
Related Tags :
Next Story