விவசாயிக்கு கத்திக்குத்து
விவசாயிக்கு கத்திக்குத்து
நெல்லை :
நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள முல்லை நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்தாஸ் என்ற ஸ்டீபன்ராஜ் (வயது 35). விவசாயி. இவருக்கும், மேலப்பாளையத்தை சேர்ந்த ராசப்பா (30) என்பவருக்கும் இடையே ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஸ்டீபன்ராஜ், மேலப்பாளையம் குறிச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராசப்பா உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து ஸ்டீபன்ராஜை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கைகளில் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராசப்பாவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story