கடம்பூர் கம்பத்ராயன் கிரிமலையில் வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்


கடம்பூர் கம்பத்ராயன் கிரிமலையில் வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Oct 2021 4:54 AM IST (Updated: 6 Oct 2021 4:54 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் கம்பத்ராயன் கிரிமலையில் வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

டி.என்.பாளையம்
கடம்பூர் கம்பத்ராயன் கிரிமலையில் வேல்கம்புகளை பிடுங்கியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 
வேல்கம்புகளை பிடுங்கினார்கள்...
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப் பகுதியில் பழமையான கம்பத்ராயன் கிரி மலை பெருமாள் கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை மட்டுமே பக்தர்கள் இந்த கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை மதியம் கடம்பூரை அடுத்த பசுவனாபுரத்தை சேர்ந்த சிலர் அந்த கோவிலுக்கு சென்று மது போதையில் வேல் கம்புகளை பிடுங்கி அவமரியாதை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதை அறிந்த கடம்பூர் பகுதி பொதுமக்கள், சம்மந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று காலை கடம்பூர் போலீஸ் நிலையத்துக்கு கோரிக்கை மனு கொடுக்க சென்றனர். ஆனால் போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. 
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கடம்பூர்-சத்தி ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், பங்களாபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
பின்பு சம்மந்தபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றார்கள். இந்த திடீர் சாலை மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story