இல்லத்தரசிகள் அதிர்ச்சி...மீண்டும் உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை....!!


இல்லத்தரசிகள் அதிர்ச்சி...மீண்டும் உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை....!!
x
தினத்தந்தி 6 Oct 2021 7:09 AM IST (Updated: 6 Oct 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன. அதன்படி, ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதனால், சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.  

Next Story