அண்ணாநகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் மோதி விபத்து; வாலிபர் கால் முறிந்தது
அண்ணாநகரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் மோதியதில் வாலிபர் கால் முறிந்தது.
பூந்தமல்லி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக துரைசந்திரசேகர் (வயது 49). இருந்து வருகிறார். இவர் அண்ணா நகர், டபிள்யூ பிளாக் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அண்ணா நகர், 6-வது அவென்யூ பகுதியில் எம்.எல்.ஏ. துரைசந்திரசேகர் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக எதிரே இரு சக்கர வாகனத்தில் அண்ணாநகர், ஏ-பிளாக் பகுதியை சேர்ந்த விஜய் (24), என்பவர் வந்து கொண்டிருந்தார். அப்போது விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக திடீரென எம்.எல்.ஏ.வின் கார் மோதி விபத்துக்குள்ளானதில், விஜய் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டு எலும்பு முறிந்தது. பின்னர் காயமடைந்த விஜய்யை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓட்டி வந்த கார் மோதி வாலிபர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story