திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு அடி-உதை; 9 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவருக்கு அடி-உதை; 9 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Oct 2021 7:51 AM IST (Updated: 6 Oct 2021 7:51 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ஆட்டோ டிரைவரை அடி-உதைத்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த ஈக்காடு விசுவாச புரத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 38). நேற்று முன்தினம் பாண்டியன் திருவள்ளூர் பெரியகுப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தர்மன் என்பவருக்கும் இடையே சவாரி ஏற்றுவது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. 

இதை தொடர்ந்து தர்மன் தன்னுடன் இருந்த சதீஷ், ஹரிகிருஷ்ணன், சுரேஷ், செல்வம், மற்றொரு சுரேஷ், வடிவேலு, சரவணன், பாஸ்கர் ஆகியோருடன் சேர்ந்து பாண்டியனை தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக மேற்கண்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story