கொரோனா தடுப்பூசி போட்ட 10 பெண்களுக்கு பட்டுச் சேலை பரிசு
கோவில்பட்டியில் கொரோனா தடுப்பூசி போட்ட 10 பெண்களுக்கு பட்டுச் சேலை பரிசாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு 10 பேர்களுக்கு குலுக்கல் முறையில் பட்டுசேலை வழங்குவதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் நகரசபை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார். இதன்படி கடந்த 3 -ந்தேதி கோவில்பட்டி நகரில் 18 மையங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 496 நபர்களில் இருந்து குலுக்கல் முறையில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் பட்டு சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடராஜபுரம் கோமதி, புதுக்கிராமம் கொத்தாளமுத்து, வசந்தநகர் சரஸ்வதி, வள்ளுவர் நகர் துர்காதேவி, சுப்பிரமணியபுரம் உலகம்மாள் உள்பட 10 நபர்களுக்கு பட்டு சேலைகளை நகரசபை சுகாதார அதிகாரி இளங்கோ வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், வள்ளிராஜ், காஜா நஜ்முதீன், கணேசன், துப்புரவு பணியாளர்கள் இளையராஜா, மகேந்திரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story