ஊட்டி, கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்
ஊட்டி, கோத்தகிரியில் கடும் பனிமூட்டம்
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஊட்டி, கோத்தகிரியில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. ஊட்டி-கோத்தகிரி சாலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
கோடப்பமந்து பகுதியில் குடியிருப்புகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து இருந்தது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-8, நடுவட்டம்-18, அவலாஞ்சி-21, எமரால்டு-14, பர்லியார்-16, குன்னூர்-8, எடப்பள்ளி-10, கூடலூர்-16, தேவாலா-34, ஓவேலி-12, பந்தலூர்-74, சேரங்கோடு-18 என மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக பந்தலூரில் 7 சென்டி மீட்டர் மழை பெய்தது.
Related Tags :
Next Story