சக்தி விநாயகர் கோவிலில் கொலு வைத்து சிறப்பு பூஜை


சக்தி விநாயகர் கோவிலில் கொலு வைத்து சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 6 Oct 2021 8:05 PM IST (Updated: 6 Oct 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி சக்தி விநாயகர் கோவிலில் கொலு வைத்து சிறப்பு பூஜை நடந்தது.

கூடலூர்

கூடலூரில் நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி சக்தி விநாயகர் கோவிலில் கொலு வைத்து சிறப்பு பூஜை நடந்தது. 

நவராத்திரி விழா தொடக்கம்

நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதையொட்டி கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் அதிகாலை 5.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. இதில் குறைவான பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 11 மணிக்கு அம்மன் கும்ப கலசம் கொலு மண்டபத்தில் வைக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் விநாயகர், அம்மன், சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகளும், ஏராளமான பொம்மைகளும் அலங்கரித்து வைக்கப்பட்டது. தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை தினமும் மாலையில் துர்க்கை அம்மனுக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

பக்தர்களுக்கு தடை

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக நவராத்திரி விழா மிக எளிமையாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதனால் வழக்கமாக நவராத்திரி விழா காலங்களில் இரவு நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பக்தர்கள் வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நேற்று மஹாளய அமாவாசையை முன்னிட்டு கூடலூர் மற்றும் பொக்காபுரம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் வர தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதபோன்று டானிங்டன் கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

மேலும் கடைவீதி மாரியம்மன் கோவில், அய்யப்பன் கோவில், விநாயகர் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், டானிங்டன் விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.


Next Story