போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை நடுவக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் மகேஷ் (வயது 20). இவர் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்து உள்ளார். தொடர்ந்து கடந்த 4.10.2021 அன்று திருச்செந்தூரில் வைத்து சிறுமியை திருமணம் செய்து கொண்டாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் மகேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Related Tags :
Next Story