கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Oct 2021 9:59 PM IST (Updated: 6 Oct 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

ஒட்டப்பிடாரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரபாண்டி மகன் மாரிசெல்வம் (வயது 20). இவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்த தந்தையிடம் பணம் கேட்டார். அதற்கு 4 நாட்களில் பணம் தருவதாக தந்தை கூறினார்.
இதனால் மனமுடைந்த மாரிசெல்வம் நேற்று மாலையில் திடீரென்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story