முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்
x
தினத்தந்தி 6 Oct 2021 10:44 PM IST (Updated: 6 Oct 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி முல்லைப்பெரியாற்றின் கரையில் முன்னோர்களுக்கு ஏராளமானவர்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

தேனி : 

 புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தில் பித்ருக்கள் லோகத்தில் இருந்து நம் முன்னோர்கள் ஆசி வழங்குவதற்கு பூமிக்கு வருவதாக கருதப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக விரதம் இருந்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் நல்லது என்பது ஐதீகம். 

அதன்படி நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றின் கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்பு கோவிலில் சிவன் மற்றும் விநாயகருக்கு மோட்ச விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


Next Story