பெரியகுளத்தில் அரசு பஸ் ஜப்தி
பெரியகுளத்தில் விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் ஜப்தி செய்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம், தென்கரையை சேர்ந்தவர் முத்துராஜன் (வயது 34). கார் டிரைவர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு தேனியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெரியகுளத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சரத்துப்பட்டி அருகே தேனி நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துராஜன் படுகாயம் அடைந்தார்.
இதனை தொடர்ந்து விபத்து நஷ்டஈடு வழங்க கோரி பெரியகுளம் அரசு போக்குவரத்து கழகத்தின் மீது மாவட்ட கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், முத்துராஜனுக்கு ரூ.16 லட்சத்து 28 ஆயிரத்து 508 இழப்பீடு ெதாகை வழங்க நீதிபதி திலகம் உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகத்தினர் அவருக்கு இழப்பீடு தொகை வழங்கவில்லை.
இதனை தொடர்ந்து அவர் கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து பெரியகுளத்தில் அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ்சை ஜப்தி ெசய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பெரியகுளம் புதிய பஸ் நிலையத்தில் மதுரை செல்வதற்கு தயாராக இருந்த அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர் ரமேஷ் ஜப்தி செய்தார்.
Related Tags :
Next Story