அமராவதி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மாகாளய அம்மாவசை முன்னிட்டுபொதுமக்கள் அமராவதி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
தாராபுரம்
மாகாளய அம்மாவசை முன்னிட்டுபொதுமக்கள் அமராவதி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
மகாளய அமாவாசை
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். அன்றைய தினம் முன்னோர்களின் ஆன்மாக்கள் பூமிக்கு வந்து ஆசி வழங்கி செல்வார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவ்வாறு வரும் ஆன்மாக்களுக்களை திருப்தி செய்ய ஆற்றங்கரைகளில் வைத்து தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். அதன்படி மகாளய அமாவாசை நாளான நேற்று தாராபுரம் அமராவதி ஆற்றில் ஈஸ்வரன் கோவில் அருகிலும், புதிய மேம்பலத்திற்கு அடியிலும் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
இந்த சடங்கு செய்வதால் நீத்தார் கடன் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.கடன் பிரச்சினைகள் தீரும். புது வீடு கட்டுதல் மற்றும் திருமணம் கைகூடுதல் போன்ற நன்மைகள் நடைபெறும் என்பது நம்பிக்கை ஆகும்.
வெள்ளகோவில்
மகாளய அமாவாசையையொட்டி வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவிலில் வீரக்குமாரசாமிக்கு தங்க கவசம் அணிவித்து பூஜை நடைபெற்றது. செல்லாண்டியம்மன் கோவிலில் செல்லாண்டி அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.மேலும் வெள்ளகோவில் அருகே உள்ள மயில்ரங்கம் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தினர்.
Related Tags :
Next Story