வெறிச்சோடிய கடற்கரை
கடற்கரை வெறிச்சோடியது
தொண்டி,
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக ஸ்ரீ ராமபிரான் அவரது தந்தை தசரதனுக்கு தர்ப்பணம் செய்த இடமாக விளங்கும் தீர்த்தாண்டதானம் கடற்கரையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை யொட்டி பக்தர்கள் புனித நீராடி பூஜை செய்ய அனுமதிக்கப் படவில்லை. இதனையொட்டி தீர்த்தாண்டதானத்தில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் காவல்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டது. மேலும் இங்குள்ள கடற்கரை மற்றும் நுழைவு வாயி லில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இங்குள்ள சர்வ தீர்த்தேசுவரர் ஆலயம் நேற்று பூட்டப்பட்டது. இதனால் அமாவாசை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் தீர்த்தாண்ட தானம் தீர்த்தக்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story