மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்ததில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காட்பாடி
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்ததில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ரூ.77 ஆயிரம் பறிமுதல்
காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில் கடந்த 1-ந் தேதி காலை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜய், விஜயலட்சுமி ஆகியோர் தலைமையிலான போலீசார் கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமாஞானகுமாரி என்பவர் பணியில் இருந்தார். போலீசாரின் சோதனையில் கணக்கில் வராத ரூ.77 ஆயிரத்து 110 பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் கோப்புகளை லஞ்ச ஒழிப்பு துறையினர் ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்திற்கு வரும் லாரிகளிலும் மற்றும் தமிழகத்தில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் மீது வழக்கு
இதுதொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமாஞானகுமாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அவர் மீது தற்போது லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமஞானகுமாரி மேலதிகாரிகள் உத்தரவில்லாமல் தனிநபரை இடைத்தரகராக பணி நியமனம் செய்து லஞ்ச பணம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனிநபர் அரசு ஆவணங்களையும், கோப்புகளையும் சட்டத்திற்கு புறம்பாக கையாண்டுள்ளார். எனவே மோட்டார் வாகன ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story