கண்மாயில் மணல் அள்ளிய 3 பேர் கைது


கண்மாயில் மணல் அள்ளிய 3 பேர் கைது
x

கண்மாயில் மணல் அள்ளிய 3 பேர் கைது

சிவகாசி
சிவகாசி எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் மணல் கடத்தல் குறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை கண்மாய் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் சிலர் கண்மாயில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த அழகாபுரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 32), கருப்பசாமி பாண்டியன்(23), மாணிக்கராஜா(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மணல் அள்ள பயன்படுத்திய லாரியின் உரிமையாளர்கள் போத்திராஜா, அழகர்சாமி, லாரி டிரைவர் தங்கேஸ்வரன், கருப்பசாமி, ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் அள்ள பயன்படுத்திய மணல் அள்ளும் எந்திரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story