மாவட்ட செய்திகள்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் + "||" + 108 Childbirth for a woman in an ambulance

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு நடந்த பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 23). இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இந்நிலையில் ஜெயந்தி மீண்டும் கர்ப்பமானார். நேற்று மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கீழப்பழுவூரில் இருந்து பாப்பாங்குளம் கிராமத்திற்கு விரைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயந்தியை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கீழப்பழுவூர் அருகே வந்தபோது ஜெயந்திக்கு பிரசவ வலி அதிகமானதால், வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு. இதையடுத்து ஜெயந்திக்கு, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் நீலகண்டன் பிரசவம் பார்த்தார். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தை மற்றும் தாயை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரூ.2½ லட்சத்துக்கு குழந்தை விற்கப்பட்ட வழக்கு: பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேர் கைது
சென்னையில் பிறந்த 5 நாளில் ரூ.2½ லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இதுதொடர்பாக பெண் புரோக்கர்கள் உள்பட 3 பேரை கைது செய்த போலீசார், பணம் கொள்ளை போனதாக நாடகமாடிய தாயையும் பிடித்தனர்.
2. பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம்: சாக்குமூட்டையில் கட்டி வைத்த பச்சிளம் குழந்தை சாவு பாட்டி கைது
பெண் பார்க்க வந்தவருடன் மலர்ந்த காதலால் கர்ப்பம் அடைந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொன்றதாக பாட்டி கைது செய்யப்பட்டார்.
3. பிக்பாஸ் ஆரவ் - ராஹி தம்பதிக்கு குழந்தை பிறந்தது
பிக்பாஸ் சீசன் ஒன் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வான ஆரவ் தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
4. குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
குழியில் தேங்கிய மழைநீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
5. உளுந்தூர்பேட்டை அருகே பாிதாபம் சுடுகஞ்சி கொட்டி 1 வயது குழந்தை பலி
உளுந்தூர்பேட்டை அருகே சுடுகஞ்சி கொட்டி 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது