அரிவாளை காட்டி மிரட்டி போதை மாத்திரை கேட்டு ரகளை 2 வாலிபர்கள் கைது


அரிவாளை காட்டி மிரட்டி போதை மாத்திரை கேட்டு ரகளை 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 7 Oct 2021 1:46 AM IST (Updated: 7 Oct 2021 1:46 AM IST)
t-max-icont-min-icon

பட்டுக்கோட்டையில், மருந்துக்கடையில் அரிவாளை காட்டி மிரட்டி போதை மாத்திரை கேட்டு ரகளை செய்த 2 பேர் ஆற்றில் குதித்து தப்ப முயன்றபோது பிடிபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டையில், மருந்துக்கடையில் அரிவாளை காட்டி மிரட்டி போதை மாத்திரை கேட்டு ரகளை செய்த 2 பேர் ஆற்றில் குதித்து தப்ப முயன்றபோது பிடிபட்டனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர். 
போதை மாத்திரை கேட்டு ரகளை
தஞ்ைச மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்துக்கடைக்கு 4-ந் தேதி இரவு 11 மணி அளவில் 2 வாலிபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அங்கிருந்த ஊழியர்களிடம் போதை மாத்திரை கேட்டுள்ளனர்.அதற்கு மருந்துக்கடையில் இருந்த பெண் ஊழியர், டாக்டர் சீட்டு இல்லாமல் எந்த மாத்திரையும் கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் இருவரும் மருந்துக் கடைக்குள் அத்துமீறி புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி ரகளை செய்துள்ளனர்.
தப்பியோட்டம்
இதனால் மருந்துக்கடையில் இருந்த பெண் ஊழியர்கள் பயந்துபோய் அலறியடித்துக்கொண்டு கடையில் இருந்து வெளியில் ஓடினர். பின்னர் அந்த வாலிபர்கள் இருவரும் மருந்துக் கடைக்குள் புகுந்து சில மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் போலீசாருடன் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். 
ஆற்றுக்குள் குதித்தனர்
பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன் மேற்பார்வையில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை மகாராஜசமுத்திரம் காட்டாறு பகுதியில் அந்த வாலிபர்கள் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 
இதனையடுத்து பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓடியவர்கள் காட்டாற்று பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர்.
கைது 
அவர்களில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேஷ்(வயது 20) என்பவருக்கு வலது கால் முறிந்தது. பண்ணவயல் கிராமத்தை சேர்ந்த ஹரிகரன்(19) என்பவருக்கு வலது கை முறிந்தது. இருவரையும் போலீசார் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
சிகிச்சைக்கு பின்னர் இருவரையும் கைது செய்து பட்டுக்கோட்டை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 14 நாள் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனைத்ெதாடர்ந்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பாராட்டினார்.

Next Story