நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு


நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 Oct 2021 3:57 AM IST (Updated: 7 Oct 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 ஒன்றியங்களில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையொட்டி கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான விஷ்ணு வாக்குப்பதிவு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் தனியார் பள்ளியில் கீழநத்தம் பஞ்சாயத்துக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அங்கு கலெக்டர் விஷ்ணு சென்று வாக்குப்பதிவு பணியை பார்வையிட்டார்.
இதே போல் சேரன்மாதேவி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தார். அப்போது பயிற்சி உதவி கலெக்டர் ஜெய் நாராயணன் சென்றார். இதே போல் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜெயகாந்தன் பாப்பாக்குடி ஒன்றியத்தில் பழவூர் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு
இதே போல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் 5 ஒன்றியங்களிலும் சென்று வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்தார். குறிப்பாக பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தினார். அங்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் கண்காணிக்கப்பட்டது.
இதுதவிர ஒருசில வாக்குச்சாவடி பகுதியில் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆதரவு திரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை போலீசார் பிடித்து வெளியேற்றினார்கள்.
........

Next Story