திருத்தணி அருகே 50 ஆண்டு கால மரம் சாலையில் சாய்ந்தது - போக்குவரத்து பாதிப்பு


திருத்தணி அருகே 50 ஆண்டு கால மரம் சாலையில் சாய்ந்தது - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 12:00 PM IST (Updated: 7 Oct 2021 12:00 PM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே 50 ஆண்டு கால மரம் சாலையில் சாய்ந்ததால் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகை மாதா கோவில் அருகே சாலையோரம் இருந்த 50 ஆண்டு கால பழமை வாய்ந்த புளிய மரம் திடீரென்று சாலையில் சாய்ந்தது. அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த புளிய மரம் சாய்ந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். 

இதனால் திருத்தணியில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை, பெங்களூரு செல்லும் பஸ்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி சாலையில் சாய்ந்த புளியமரத்தை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினார்கள். 

இந்த மரத்தின் மற்றொரு பகுதி அருகாமையில் இருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மின்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று மின்கம்பத்தின் மீது இருந்த மரத்தின் கிளைகளை வெட்டியெடுத்து அந்த பகுதிக்கு மீண்டும் மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தனர். சாலையில் புளியமரம் சாய்ந்ததால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து தடைபட்டது.

Next Story