தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிரண்டர் விலை நிர்ணயம்


தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிரண்டர் விலை நிர்ணயம்
x
தினத்தந்தி 7 Oct 2021 4:50 PM IST (Updated: 7 Oct 2021 4:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலண்டரின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விலை நிர்ணயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 1.10.21 முதல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கான புதிய விலையை எரிவாயு நிறுவனங்கள் நிர்ணயம் செய்து உள்ளன. அதன்படி இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடியில் ரூ.964 ஆகவும், கோவில்பட்டியில் ரூ.962.50 ஆகவும், கழுகுமலையில் ரூ.971 ஆகவும், கயத்தாரில் ரூ.974 ஆகவும், எட்டயபுரத்தில் ரூ.962.50 ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.981 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ.964.50 ஆகவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.949 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதிக பணம்
எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டருக்கு மேலே குறிப்பிட்டு உள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவை இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story