தூத்துக்குடி விமான நிலையத்தில் நாட்டுப்புற பாடல்களை இசைத்து 75வது சுதந்திரதினவிழா கொண்டாட்டம்


தூத்துக்குடி விமான நிலையத்தில்  நாட்டுப்புற பாடல்களை இசைத்து  75வது சுதந்திரதினவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2021 6:18 PM IST (Updated: 7 Oct 2021 6:18 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்தில் நாட்டுப்புற பாடல்கள் இசைத்து 75வது சுதந்திரதினவிழாவை கொண்டாடினர்

தூத்துக்குடி:
நாட்டின் 75-வது சுதந்திரதின விழாவை ஆண்டு முழுவதும் பல்வேறு துறைகள் சார்பில் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி விமான நிலையம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக விமான நிலையத்தில் போலீஸ் இசைக்குழு மூலம் நாட்டுப்பற்று பாடல்களை இசைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் நெல்லை மாநகரத்தை சேர்ந்த போலீஸ் இசைக்குழுவினர் தொடர்ச்சியாக நாட்டுப்பற்று பாடல்களை இசை வாத்தியங்கள் மூலம் வாசித்தனர். இந்த நிகழ்ச்சி பயணிகளை மிகவும் கவர்ந்தது.
தொடர்ந்து முடிவைத்தானேந்தல் கிராமத்தில் விமான நிலைய ஊழியர்கள் மூலம் தூய்மை பணி மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் விமான போக்குவரத்து துறை கட்டுப்பாட்டு துறை துணை பொதுமேலாளர் சுப்ரவேலு, விமான தகவல் தொடர்பு துறை உதவி பொது மேலாளர் அனில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா, விமான நிலைய மேலாளர் ஜெயராமன், விமான நிறுவனத்தை சேர்ந்த பிரவின் சத்ய சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story