ஜி9 ரக வாழை நாற்று உற்பத்தி குறித்து பயிற்சி
ஜி9 ரக வாழை நாற்று உற்பத்தி குறித்து பயிற்சி
ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு கூடம் உள்ளது. இங்கு ஜி-9 ரக வாழை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு தாவரவியல் பூங்காவில் திசு வளர்ப்பு முறையில் வாழை நாற்றுகள் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் திசு வளர்ப்பு கூடத்தில் ஜி-9 ரக வாழை நாற்றுகளை உற்பத்தி செய்வது, குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிப்பது, நர்சரியில் இயற்கை உரங்களை மூலம் நன்றாக வளர வைப்பது குறித்து விளக்கினார். மேலும் பூங்காவில் மலர், அலங்கார நாற்றுகளை விதைத்து நடவுக்கு தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவ-மாணவிகள் திசு வளர்ப்பு கூடம், நர்சரி மற்றும் பழமையான தாவரங்கள், மரங்களை பார்வையிட்டனர்.
Related Tags :
Next Story