உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல்
சின்னசேலம் அருகே உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு வந்த ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
சின்னசேலம்,
சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி 2-ம் கட்ட தேர்தல் நாளை (சனிக்கிழமை)நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் சின்னசேலம் அருகே மறவாநத்தம் பிரிவு சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரியும், தனி தாசில்தாருமான மணிகண்டன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த காரில் உரிய ஆவணமின்றி சின்னசேலத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவர் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்தை கொண்டு வந்தார். இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சின்னசேலம் ஒன்றிய தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பழனிவேலிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story