சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு 10 ரோப்கார் கேபின்கள் வந்தன
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் ரோப்கார் திட்டத்துக்கு 10 கேபின்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
சோளிங்கர்
சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவில் ரோப்கார் திட்டத்துக்கு 10 கேபின்கள் கொல்கத்தாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
ரோப்கார் திட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி மலைக்கு 1,305 படிக்கட்டுகள் உள்ளது. இந்த படிக்கட்டுகள் வழியாகத்தான் நடந்து செல்ல வேண்டும். இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளில் நடந்து சென்று தரிசிக்க சிரமப்பட்டனர். இதனால் பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2010-ம் ஆண்டு ரூ.9.30 கோடி மதிப்பீட்டில் ரோப்கார் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போது இந்த இத்திட்டத்தை விரைந்து முடிக்க உத்தரவிட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒரு மாதத்திற்கு முன் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுசெய்து ரோப்கார் திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
10 கேபின்கள் வந்தது
தொடர்ந்து பணி நடைபெற்று 90 சதவீத பணிகள் முடிந்து, இறுதிகட்ட பணியாக மலையின் கீழிருந்து மேலே செல்வதற்காக கொல்கத்தாவிலிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 10 ரோப்கார் கேபின்கள் மற்றும் அதன் துணை உபரணங்களும் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை கோவில் உதவி ஆணையர் ஜெயா பார்வையிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவில் பொறியாளர் கிஷோர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story