வாணியம்பாடி நகராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது


வாணியம்பாடி நகராட்சியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 7 Oct 2021 10:52 PM IST (Updated: 7 Oct 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். அதன்படி வாணியம்பாடி நகராட்சியில் உள்ளது வார்டுகளில் ஒவ்வொரு வீடுவீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் வாணியம்பாடி நகராட்சி சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர் சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story