2-ம் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் 3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு


2-ம் கட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் 3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 7 Oct 2021 5:27 PM GMT (Updated: 2021-10-07T22:57:58+05:30)

3,500 பேருக்கு பணி ஒதுக்கீடு

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் 2-ம் கட்டமாக நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று 3,500 பேர் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான குமாரவேல்பாண்டியன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் விஜயராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story