திருமயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருமயம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள பட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவர் மதுரை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார். நேற்று கடையில் மணிமாறன் மனைவி ஆர்த்தி மற்றும் மணிமாறன் தந்தை சின்னச்சாமி ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் குடிப்பதற்கு குளிர்பானம் கேட்டுள்ளனர். குளிர்பானத்தை எடுக்க மணிமாறனின் தந்தை உள்ளே சென்ற போது, திடீரென ஆர்த்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் 2 பேரும் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் ஆர்த்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story